குரூப் 4 தேர்வு ரத்து இல்லை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

அமைச்சர் அமைச்சர் சென்னை , ஜன.30குரூப்-4 தேர்வில் முறை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், ரத்தாகுமா என்பது குறித்து அமைச்சர் ஜெய க்குமார் விளக்கம் அளித் துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: முறைகேடு செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. தர வரிசைப் பட்டியலில் முன் னிலை பெற்றவர்கள் மட் டுமல்லாது அனைவரின் விடைத்தாள்களும் பரிசோ திக்கப்பட்டுள்ளன. வெளிப் படைத் தன்மையுடன் பலர் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சிலர் செய்த தவ றுக்காக அனைத்துத் தேர் வர்களையும் தண்டிக்க முடியாது. எதிர்காலத்தில் முறைகேடு நடக்காத வண் ணம் நடவடிக்கை எடுக் கப்படும். சம்பந்தப்பட்ட மையங்களில் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடந் திருக்க வாய்ப்பில்லை. - முறைகேட்டில் ஈடுபட்டி ருப்பது பெரும் புள்ளியாக இருந்தாலும் சரி, கருப்பு ஆடுகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். ஒட் டுமொத்தத் தேர்வையே ரத்து செய்தால், உண்மை யாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப் படுவர். குரூப்-4 தேர்வை 16 லட்சம் பேர் எழுதி இரு க்கின்றனர். அவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது நியாயமில்லை. சிபிசிஐடி சரியான பாதையில் விசாரணை யைக் கொண்டு செல் கிறது. தவறிழைத்த அரசு ஊழியர்கள் சிறைக்கு அனு ப்பப்படுவர். வேலை இழப் பர். வருங்காலத்தில் எந்த ஓட்டையும் இல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத் தப்படும்". இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவி த்தார்.