கடலூர் மாவட்டம் அண்ணா கிராம ஊராட்சி ஒன்றியம் பாலூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு சிலர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.
இன்னிலையில் கிராமத்தில் ஊர் கூட்டம் கோவில் அருகே கூடியது. ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு ஒருவர் ரூபாய் 12 லட்சம் கொடுத்து ஊராட்சி தலைவர் பதவி பெற்றுவிட்டார். வேட்புமனு தாக்கல் செய்த மற்றவர்கள் விலகி கொள்ள வேண்டும் என்று கிராம முக்கியஸ்தர்கள் கூறி விட்டார்கள்.
சம்பவம் நடந்த போது ஊரில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.